என்னமா இப்படி பண்றீங்களே மா! கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த சாமுராய் பட நடிகைக்கு அட்வைஸ் செய்த ஃபாலோவர்கள்!

Estimated read time 1 min read

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2002ஆம் வெளியான படம் சாமுராய். இந்தப் படத்தை காட்டிலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆகாய சூரியனை, அடிதடி அப்பத்தா போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் இடம்பெற்று கொண்டாடப்பட்டு வருகின்றன.

 

அனிதாவின் சினிமா பிரவேசம் : 

சாமுராய் படத்தில் சீயான் விக்ரம் ஜோடியாக நடித்தவர் அனிதா ஹசானந்தினி. இவர் தற்போது இந்தி தொடர்களில் நடித்து வருகிறார். இந்தியில் வெளியான தால் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமிழில் என்ட்ரி கொடுத்தது ‘வருஷமெல்லாம் வசந்தம்’ திரைப்படத்தில். அதனைத் தொடர்ந்து சாமுராய், சுக்ரன், மகாராஜா போன்ற சில படங்களில் நடித்த பிறகு இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டிவந்தார். தற்போது நாகினி தொடரின் 6ஆவது சீசனில் நடித்து வருகிறார். 

லேட்டஸ்ட் போஸ்ட் :

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனிதா ஹசானந்தினி அவ்வப்போது ஏரளமான போட்டோஸ், வீடியோஸ் போஸ்ட் செய்வது வழக்கம். அவை அனைத்திற்கும் அவரது ஃபாலோயர்கள் லைக்ஸ்களை குவித்து வந்தனர். அந்த வகையில் அனிதா தற்போது போஸ்ட் செய்துள்ள ஒரு வீடியோ வழக்கத்துக்கு மாறாக நெட்டிசன்களின் எதிர்ப்புகளைப் பெற்று வருகிறது.

 


 

கருத்து தெரிவிக்கும் ஃபாலோயர்கள் :

தங்கள் குழந்தைகளுக்கு கிஸ் கொடுத்து அதனை போஸ்ட் செய்து நடிகைகள் எதிர்ப்புகளைப் பெற்று வரும் நிலையில்,  அனிதா ஹசானந்தினி தனது குழந்தை மற்றும் கணவருக்கு மாறி மாறி முத்தமிடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அனிதாவின் குழந்தை இந்த வீடியோவில் தன் அம்மா – அப்பாவைப் பார்த்து பொசசிவ் ஆகும் வகையில் உள்ள நிலையில் அனிதாவின் ஃபாலோயர்கள் இப்படி குழந்தை முன் நடந்து கொள்ளாதீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், குழந்தை முன்பாக முத்தமிடத் தேவையில்லை எனவும் ஒருதரப்பினர் கமெண்ட் செய்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் அனிதாவின் க்யூட்டான குடும்பத்தை வாழ்த்தி லைக்ஸ் அள்ளி வழங்கி வருகின்றனர். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours