சிறந்த ஆவணப்படம் பிரிவில் சௌனக் சென் இயக்கிய ‘All that Breathes’, சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய ‘The Elephant Whisperers’ மற்றும் சிறந்த பாடல் பிரிவில் கீரவாணி இசையில் ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
விழாவினைத் தொடங்கி வைத்த ஜிம்மி கிம்மல், மேடையில் யாரேனும் அதிக நேரம் பேசினால் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆடியவாறே வரும் நடனக்குழுவினர், அவர்களை அப்படியே வெளியே அழைத்துச் சென்றுவிடுவர் என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours