3/16/2023 2:10:45 PM
கொச்சி: சமீபத்தில் கொச்சியில் பிரம்மபுரம் பகுதியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி, 80 சதவீத தீயை அணைத்தாலும் புகைமூட்டத்தால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு, வெளியூர்களுக்கு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கொச்சிக்கு திடீரென படப்பிடிப்புக்காக வந்த மம்மூட்டி புகைமூட்டத்தில் சிக்கிக் கொண்டார். இது பற்றி அவர் கூறும்போது, ‘இந்த தீ விபத்து நடந்த சமயத்தில் நான் புனேயில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தேன். அதன்பிறகு கேரளாவில் நடைபெறும் இன்னொரு படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சிச் திரும்பிய அன்றைய தினமே எனக்கு இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
தொடர்ந்து மூச்சுவிட சிரமமாக இருந்தது. மறுநாள் வயநாட்டில் நடக்கும் படிப்பிடிப்பிற்காக கிளம்பிச் சென்ற பின் தான் எனது உடல் நிலை தேறியது. இந்த விபத்துக்காக அரசை குறை கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து சரியாக கையாளாத நாமும் இதற்கு பொறுப்புதான். இனியாவது இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றார்.
+ There are no comments
Add yours