Custody Teaser : துரத்தும் சாவிடமிருந்து தப்பியோடும் நாகசைதன்யா… வெளியானது வெங்கட் பிரபுவின் ’கஸ்டடி’ டீசர்!

Estimated read time 1 min read

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள  கஸ்டடி படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மாநாடு, மன்மத லீலை திரைப்படங்களைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம்  ‘கஸ்டடி’. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் நாக சைதன்யாவின் 22ஆவது படமாகும்.

நடிகை க்ரித்தி ஷெட்டி நாகசைதன்யாவுடன் இந்தப் படத்தில் 2ஆவது முறையாக இணைந்துள்ளார். அரவிந்த் சாமி, சரத் குமார், பிரியாமணி, பிரேம்ஜி, கிஷோர் சம்பத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மாமனிதன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

வரும் மே 12ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இன்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours