தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கீரவாணியின் கார்பென்டர்ஸ் வார்த்தை
15 மார், 2023 – 13:39 IST
தெலுங்கு திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்தது போல ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விழா மேடை ஏறி பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் கீரவாணி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போது அவர் பேசும்போது நான் கார்பென்டர்ஸ் கேட்டு வளர்ந்தவன் என்று கூறினார்.
அவர் குறிப்பிட்ட கார்பென்டர்ஸ் என்பது ஹாலிவுட்டில் எண்பதுகள் வரை பாப் மியூசிக்கில் கொடிகட்டி பறந்த அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதர இசையமைப்பாளர்களான கார்பென்டர்ஸ் குறித்து. ஆனால் இந்த வார்த்தை பெரும்பாலான மீடியாக்களில் தச்சு வேலை செய்பவர்கள் என புரிந்து கொள்ளப்பட்டு, கீரவாணி மரக்கட்டைகளில் தச்சு வேலை செய்யும்போது ஏற்படும் சத்தத்தை கேட்டு வளர்ந்தார் என்கிற அர்த்தத்துடன் செய்திகள் வெளியாகின. இதை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்..
+ There are no comments
Add yours