2020-ல் கொரோனாவால் இந்தியாவில் போடப்பட்ட லாக்டௌனால் புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தித்த அவலங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கோவிட் லாக்டௌனில் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், அந்தச் சமயத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகள், கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் மக்களை அகதிகள் போல அலைக்கழித்த காவல்துறையினர், அரசாங்கத்தின் நிர்வாகம் போன்ற அனைத்தையும் விமர்சிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று பலரும் டிரெய்லரைப் பாராட்டினாலும், சிலர், இந்த டிரெய்லர் தேவையின்றி லாக்டௌன் பற்றிய எதிர்மறையான விஷயங்களைக் கொண்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.
அதேபோல் அப்போது நடந்த புலம்பெயர்வை, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த பிரிவினையை ஒப்பிட்டும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் ‘Bheed’ படத்தின் டிரெய்லர் வீடியோ private-ற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும், ‘மக்களின் பிரச்னைகளை எடுத்துரைக்கக்கூட இங்கு உரிமை இல்லையா? இது ஜனநாயக நாடுதானா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வீடியோ அகற்றப்பட்டது குறித்துத் தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours