” அரசியல் வேண்டாம்னு தரைலவர் தெளிவாக விளக்கிச் சொன்ன பிறகும்கூட இவரைப் பயன்படுத்தவே பலரும் நினைக்கிறாங்க. ‘அரசியலுக்கு வரவேண்டாம், ஆதரவா ஒரு அறிக்கை, பேச்சுன்னு தர மாட்டாரா’னு எதிர்பார்க்குறாங்க நிறைய பேர். இந்த மாதிரியான சூழல்ல இந்த நிகழ்ச்சி மீண்டும் தன்னுடைய அரசியல் வருகைக் குறித்த பேச்சு எழுவதற்கான ஒரு இடமா அமைய வாய்ப்பிருக்க சூழல் உருவாகலாம்னு அவர் நினைத்திருக்கலாம்.
ஏன்னா, முழுக்க ரசிகர்களுக்காகவே நடத்தத் திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியில் மெது மெதுவா அரசியல் தலைவர்கள் சிலர் உள்ளே நுழையத் தொடங்கினதை தலைவர் எதிர்பார்க்கலை.
சைதை துரைசாமி, ஏ.சி சண்முகம், திருநாவுக்கரசர், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட சிலரின் பங்கு இந்த நிகழ்ச்சியில் இருக்கறதா தெரியவந்திருக்கு. இவர்கள் அனைவரும் அவரின் நண்பர்களாக இருந்தாலும் அரசியல் சார்ந்தவர்களாக இருப்பதாலும், அடுத்த மக்களவைத் தேர்தல் பணிகள் தொடங்க இருக்கிற சூழலில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கிடலாம்னு தோணவே, யோசிக்காம உடனே நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லிட்டார்” என்கிறார்கள் இவர்கள்.
+ There are no comments
Add yours