யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பிறந்து ஒருசில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்குட்டிகளை பராமரித்து வளர்த்தவர்கள் அங்கு யானை பாகனாக பணியாற்றும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி.
இவர்கள் இந்த யானை குட்டிகளை எவ்வாறு வளர்த்தார்கள் என்பது குறித்த ஆங்கில ஆவணப்படம் ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு எடுத்து வெளியிடப்பட்டது. ‘THE ELEPHANT WHISPERERS’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கர் திரைப்பட விருதிற்கு இந்த ஆவணப் படமும் போட்டியிட்டது. அதில் THE ELEPHANT WHISPERERS ஆவணப்படமானது சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours