இந்நிலையில் சிறந்த ஆவணக்குறும்படம் பிரிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதில் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கிய ‘The Elephant Whisperers’ படம் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. தாயை இழந்த இரண்டு யானைக்கன்றுகளைப் பெற்றோரைப்போலப் பராமரித்து வளர்த்த தென்னிந்தியாவின் முதல் தம்பதியைப் பற்றிய உண்மைச் சம்பவம்தான், இயக்குநர் கார்த்திகி கோன்சால்விஸ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Elephant Whisperers’ தமிழ் ஆவணப்படம்.
இயக்குநர் கார்த்திகி கோன்சால்விஸ், விருதினைப் பெற்றுக்கொண்டு மேடையில் பேசுகையில், “நமக்கும் இயற்கைக்கும் இடையேயான புனித பந்தம் குறித்துப் பேச இன்று இந்த மேடையில் நிற்கிறேன். பழங்குடி சமுதாயத்தின் மரியாதை, மற்ற உயிரினங்கள் மேல் அவர்கள் காட்டும் பரிவு, அனைத்து உயிர்களையும் ஒன்றிணைத்த இணக்கமான வாழ்வு போன்றவற்றுக்கு இந்த விருது. எங்கள் படத்தினை அங்கீகரித்ததற்கும் பழங்குடி மக்களை முன்னிலைப்படுத்தியதற்கும் அகாடமிக்கு என் நன்றிகள். இந்த விருதினை என் தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours