அந்த வகையில் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டு ‘ஸ்வாக் பேக் (swag bag)’ என்ற பரிசுப் பைகள் தரப்பட்டன. அதில் மேக்அப் பொருள்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள், அழகு சம்பந்தமான இலவச சிகிக்சைத் திட்டங்கள் மற்றும் அவர்களின் வீட்டைப் புதுப்பிப்பதற்கான இலவச சேவைகளுக்கான கூப்பன்கள் என சுமார் ரூ.76 லட்சம் ($100K) மதிப்புள்ள பல பரிசு பொருள்கள் வழப்பட்டன.
அதில் ‘The Lifestyle‘ எனும் கனடாவில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மிகப்பெரிய எஸ்டேட்டில் தங்கி கனடாவின் சுற்றுலாவை ரசிப்பதற்கான ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டுமே சுமார் 32 லட்சம் என்று கூறப்படுகிறது. அதேபோல புகழ்பெற்ற சுற்றுலா இடமான இத்தாலிய கலங்கரை விளக்கத்தில் எட்டு பேர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆஃபரின் மதிப்பு சுமார் 7 லட்சம் ($9,000) என்கிறார்கள். தங்களின் வீட்டை மறுசீரமைக்க விரும்புவோர் மைசன் கன்ஸ்ட்ரக்ஷனின் $25,000 மதிப்புள்ள திட்ட மேலாண்மை கட்டணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், தங்களின் தலைமுடியைச் சீரமைத்துக்கொள்ளவும், அழகை மேம்படுத்திக் கொள்ளவும் சில மருத்துவச் சேவைகள் இலவசமான வழகப்படுகின்றன.
இதுதவிர சருமப் பராமரிப்புக்கான பொருள்கள், பட்டுத் தலையணை, பயணத் தலையணை, 18 டாலர் மதிப்புள்ள ஜப்பானிய பால் ரொட்டி, வாசனைப் பொருள்கள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்தப் பொருள்களும் இதில் அடங்கும்.
+ There are no comments
Add yours