இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலமாக அறிமுகமாக இருந்தாலும் , தெலுங்கில் நடித்த ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.பின்னர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த காலகட்டத்தில் சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பிரம்மாண்டமாக நடைபெற்றது
தொடர்ந்து நான்கு வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி 2021 ஆம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே சமந்தா அவருடைய பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனி என்ற குடும்ப பெயரை அதிரடியாக சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார். இதன் மூலம் குறுகிய காலத்தில் இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
மேலும் படிக்க | சூர்யாவை விட மாஸ் லுக்கில் அருண் விஜய்! லீக் ஆன வணங்கான் புகைப்படம்!
சமந்தா நாக சைதன்யா திருமணம் முறிவுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டன. இந்நிலையில் கடந்த வருடம் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அந்த நிகழ்ச்சியில் நாங்கள் சைதன்யா பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். ஒரு அறையில் என்னையும் நாகசைதன்யாவையும் நீங்கள் அடைத்து வைத்திருந்தால் அங்கு கூர்மையான ஆயுதங்களை நீங்கள் வைத்திருக்கக் கூடாது என்று பதில் அளித்து இருந்தார். இதன் மூலம் இவர்களது சொந்த வாழ்க்கையில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது சமந்தா விவாகரத்துக்கான காரணம் குறித்து பிரபல விமர்சகரும் ஓவர்சீஸ் சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்த் ட்விட்டரில் சமந்தா பற்றிய ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் நாக சைதன்யா கொடுத்த டார்ச்சரால்தான் நடிகை சமந்தா விவாகரத்து செய்ததாகவும் அதோடு கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்ததாக இவர் பதிவிட்டிருந்தார்.
BREAKING NEWS : As per #SamanthaRuthPrabhu, #NagaChaitanya abused her badly. He was the Worst Husband ever. I suffered alot mentally & physically torture. I was even Pregnant but i did abortion. Thank god, I divorced & moved on. pic.twitter.com/7ybQYB93PZ
— Umair Sandhu (@UmairSandu) March 12, 2023
சமந்தா பற்றிய அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, நாக சைதன்யா ஒரு மோசமான கணவர் அவரால் நான் உடலளவிலும் மனதளவிலும் கொடுமைகளை அனுபவித்தேன். நான் கர்ப்பமான பிறகு கருக்கலைப்பு செய்ய வேண்டியதாயிற்று. நன்றி கடவுளே நான் விவாகரத்து பெற்றுக் கொண்டு விலகி விட்டேன் இவ்வாறு சமந்தா என்னிடம் கூறியதாக உமர் சந்த் உடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உமர் சந்த் அந்த பதிவு தற்போது இணையதளத்தில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
இதை அடுத்து சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அதிலிருந்து மீண்டு தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமந்தா விவாகரத்து பற்றி விமர்சகர் உமர் சனத் பதிவிட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யானது என சமந்தா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய சொந்த விளம்பரத்திற்காக இப்படியெல்லாம் சமந்தாவிற்கு எதிராக செய்திகள் பரப்பப்படுவதாகவும் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours