ஆஸ்கர் விருது விழா – தீபிகா படுகோனேவைப் பாராட்டிய கங்கனா ரணவத்

Estimated read time 1 min read

ஆஸ்கர் விருது விழா – தீபிகா படுகோனேவைப் பாராட்டிய கங்கனா ரணவத்

13 மார், 2023 – 13:00 IST

எழுத்தின் அளவு:


Kangana-praises-Deepika-padukone-at-oscar-award

பாலிவுட்டின் பரபரப்பான கதாநாயகிகளில் ஒருவர் கங்கனா ரணவத். அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகளில் அடிபடுபவர். பாலிவுட்டின் நெப்போட்டிச அதிகார மையத்தை கடுமையாக எதிர்ப்பவர்களில் ஒருவர். தனது சுய திறமையால் முன்னேறி இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா. அவ்வளவு சுலபத்தில் சக நடிகர், நடிகையரைப் பாராட்டிவிட மாட்டார்.

ஆனால், இன்று சக பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவைப் பாராட்டியுள்ளர். நடைபெற்று முடிந்து 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவராக இடம் பெற்று ‘சிறந்த ஒரிஜனல்’ பாடலுக்கான போட்டிப் பிரிவில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலை மேடையில் நேரடியாகப் பாடுவதற்கான அறிமுக அறிவிப்பை வெளியிட்டார்.

அது பற்றிய ஒரு டுவிட்டர் பதிவை ரிடுவீட் செய்து தீபிகாவைப்ப ராட்டியுள்ளார் கங்கனா. “தீபிகா படுகோனேவின் தோற்றம் எவ்வளவு அழகு. ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றாகப் பிடித்து, அதன் உருவத்தையும், நற்பெயரையும், அந்த நுட்பமான தோள்களில் சுமந்து கொண்டு, மிகவும் அன்பாகவும், நம்பிக்கையுடனும் பேசுவதைப் பார்ப்பது எளிதல்ல. இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள் என்பதற்கு தீபிகா நிமிர்ந்து நிற்கிறார்,” என்று வாழ்த்தியுள்ளார்.

மேலும், ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘த எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் கங்கனா.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours