3/13/2023 12:40:04 AM
மும்பை: கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தனது அழகின் ரகசியம் குறித்து கூறியதாவது: எல்லோரிடமும் ஒவ்வொருவிதமான அழகு இருக்கிறது. கண்ணாடி முன்னால் நின்று என்னைப் பார்க்கும்போது, மிகவும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டால் போதும். எப்போதுமே நான் அப்படித்தான் நினைப்பேன். மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அழகுக்கு உதாரணமாக யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சிலர் சற்று பருமனாக இருப்பதை அழகு என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருக்காகவும் தங்கள் உடல் வடிவத்தை மாற்றிக்கொள்வதற்கான அவசியம் இல்லை. தொடர்ந்து 6 மாதங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பது உறுதி. என்னைப் பொறுத்தவரை ஒரு உடற்பயிற்சியாளரை நியமித்து, அவரது ஆலோசனைப்படி நடக்கிறேன். இதன்மூலம் எனது கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தைக் காப்பாற்றி வருகிறேன். திரைத்துறையில் அழகுக்கும், திறமைக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்படும்.
+ There are no comments
Add yours