3/12/2023 12:13:32 AM
சென்னை: பாபிநீடு பி வழங்க, வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.எஸ்.என்.பிரசாத், பிரவீன் டேனியல் இணைந்து தயாரிக்கும் படம், ‘அஸ்வின்ஸ்’. ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த வசந்த் ரவி, தற்போது ‘அஸ்வின்ஸ்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் திரைக்கதை எழுதி தருண் தேஜா இயக்குகிறார். இவர் பல குறும்படங்களை இயக்கி விருதுகள் பெற்றவர். இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையைக் கட்டவிழ்த்துவிடும் 1,500 ஆண்டு பழமையான சாபத்துக்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவைச் சுற்றி வரும் இப்படம், முழுநீள சைக்கலாஜிக்கல் ஹாரர் வகையைச் சேர்ந்தது. விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், ‘நிலா காலம்’ உதயதீப், சிம்ரன் பரீக் நடிக்கின்றனர். எட்வின் சகே ஒளிப்பதிவு செய்ய, விஜய் சித்தார்த் இசை அமைக்கிறார்.
+ There are no comments
Add yours