Sanjay Dutt joined the shoot for Leo

Estimated read time 1 min read

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்

3/12/2023 12:20:19 AM

ஜம்மு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், ‘லியோ’. சஞ்சய் தத், திரிஷா, கவுதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் 7 வில்லன்கள். அவர்களுக்கு தலைவனாக சஞ்சய் தத் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதையடுத்து மும்பையிலிருந்து காஷ்மீருக்கு நேற்று அதிகாலை வந்தார் சஞ்சய் தத். பின்னர் லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அவருடன் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோரும் சேர்ந்து நடித்து வருகிறார்கள். விஜய், சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours