சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விழா மார்ச் 13 ஆம் தேதி நாளை நடைபெறுகிறது. இந்த விருது விழாவை உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்தியா சார்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழாவை நீங்கள் நேரலையில் எங்கு? எப்படி பார்க்கலாம்? என தேடிக் கொண்டிருந்தீர்கள் என்றால், அதற்கான பதில் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.
எப்போது பார்க்க வேண்டும்?
அமெரிக்க நேரப்படி மார்ச் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் ஆஸ்கர் 2023 விருது விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, மார்ச் 13 அதிகாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
மேலும் படிக்க | Oscars 2023: இதுவரை அதிக ஆஸ்கார் வென்ற நடிகை யார் தெரியுமா?
எங்கு பார்க்க வேண்டும்?
ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சி இந்தியாவில் உள்ள பார்வையாளர்களுக்காக Disney+Hotstar-ல் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதுதவிர, YouTube, Hulu Live TV, Direct TV, FUBO TV மற்றும் AT&T TV உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ABC நெட்வொர்க் ஸ்ட்ரீம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவைகளில் சில இலவச சேனல்களும் இருக்கின்றன. இதற்கிடையில், பார்வையாளர்கள் ABC.com மற்றும் ABC செயலியில் நேரடியாக ஸ்ட்ரீம் ஆகும் நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம்.
ஆஸ்கார் 2023-ல் இந்தியா
எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான படைப்பு RRR இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான ஓட்டத்தில் இருப்பதால் இது இந்தியாவுக்கு ஒரு பெரிய தருணம். ஆர்ஆர்ஆர் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டுக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்ளாஸ் (டெல் இட் லைக் எ வுமன்), ஹோல்ட் மை ஹேண்ட் (டாப் கன் மேவரிக்), லிஃப்ட் மீ அப் (பிளாக் பாதர் வகண்டா ஃபாரெவர்), மற்றும் திஸ் இஸ் எ லைஃப் (எவ்ரிதிங் எவ்ரிதிங் ஆல் அட் அட் ஒன்ஸ்) ஆகியவை இந்த பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்திற்கு போட்டியாக இருக்கின்றன.
RRR திரைப்படத்தை பொறுத்தவரையில் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்தனர். பழங்குடியின தலைவர் கோமரம் பீம் மற்றும் துணிச்சலான அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வீரமிக்க செயல்கள் புனைவுடன் இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆஃபீஸில் ஆயிரம் கோடீஇ ரூபாய் வசூலை வாரிக் குவித்தது.
ஆஸ்கார் 2023-ஐ யார் தொகுத்து வழங்குவார்கள்?
கடந்த ஆண்டு ரெஜினா ஹால், ஆமி ஷுமர் மற்றும் வாண்டா சைக்ஸ் ஆகிய மூன்று தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கார் விருது நிகழ்வை நகைச்சுவை நடிகருமான ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குவார். மேலும், இந்த ஆண்டு மைக்கேல் பி. ஜோர்டான், ஹாலி பெர்ரி, ஹாரிசன் ஃபோர்டு, பெட்ரோ பாஸ்கல், புளோரன்ஸ் பக், ஆண்ட்ரூ கார்பீல்ட், கேட் ஹட்சன் மற்றும் லிட்டில் மெர்மெய்ட் நட்சத்திரம் ஹாலே பெய்லி ஆகியோர் ஆஸ்கார் விருதுகளை வழங்க இருக்கின்றனர்.
ஆஸ்கார் 2023-ல் விருது வழங்க தீபிகா படுகோன்
2023 ஆஸ்கார் விருதுகளை வழங்குபவர்களில் இந்தியாவின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே-வும் இருக்கிறார். இது இந்திய சினிமாவுக்கு கிடைத்த கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Oscars 2023: நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட உள்ள அமெரிக்க நடிகை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours