லியோ படப்பிடிப்பில் இணைந்த பாபு ஆண்டனி
12 மார், 2023 – 10:30 IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சஞ்சய் தத், விஜய் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தற்போது மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனியும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய், சஞ்சய்தத் ஆகியோருடன் பாபு ஆண்டனியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில், தான் இணைந்துள்ளது குறித்து நடிகர் பாபு ஆண்டனியே அறிவித்துள்ளதுடன் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக டில்லி ஏர்போர்ட்டில் தான் இறங்கிய போது பிரபல கால்பந்து வீரரும் நடிகருமான ஐ எம் விஜயனை சந்தித்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக தமிழில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours