Viduthalai: “இந்தப் படத்தின் தொடக்கமே ராஜா சார்தான். ஒரு வார்த்தை அப்படியே இசையாகும்!”- வெற்றிமாறன் | Director Vetrimaaran speech at ‘Viduthalai’ movie trailer and audio launch event

Estimated read time 1 min read

இவ்விழாவில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், “இந்த ‘விடுதலை’ படத்தின் தொடக்கமே ராஜா சார்தான். ஒரு 45 நிமிடம் படத்தை எடுத்துட்டு வந்து ராஜா சார்கிட்ட காமிச்சேன். அதன் காட்சிகளைப் பார்த்துட்டு ராஜா சார் ட்யூன் பண்ணதுதான் ‘வழி நெடுக காட்டுமல்லி’ பாடல். இந்தப் பாடலை கம்போஸ் பண்ணும் போதே ‘நான்தான் இதற்குப் பாட்டு எழுதுவேன்’ன்னு சொல்லிட்டுதான் ராஜா சார் இந்தப் பாட்ட எழுதினாங்க. அதன்பிறகு, ‘பின்னணி இசை இருந்தால் காட்சிகள் எடுப்பதற்கு நல்லா இருக்கும்’ என்று சொன்னேன். ‘சரி, என்ன மாதிரியான இசை வேண்டும்?’ என்று கேட்டார்.

Viduthalai Audio and Trailer Launch

Viduthalai Audio and Trailer Launch

என் மனதில் ஓர் உணர்ச்சி இருக்கு. அந்த உணர்ச்சிகளுக்கு ஒரு வார்த்தை சொல்றேன். அந்த வார்த்தையை அவர் உள்வாங்குகிறார். அதை வைத்து ஒரு இசையை உருவாக்குகிறார். என் மனதில் என்ன உணர்வோடு அந்த வார்த்தையைச் சொன்னேனோ அதே உணர்வு அந்த இசையைக் கேட்கும்போதும் எனக்குள் ஏற்பட்டது. என் உணர்வு ஒரு வார்த்தையாகி, அதை அவர் உள்வாங்கி ஒலியாய் கொடுக்கும் அந்தத் தருணம் எனக்குப் பெரிய அனுபவமாக இருந்தது. இளையராஜா சாரோட மியூசிக்கல் மைண்ட் எப்படி இருக்கும் என்பதைப் பக்கத்திலிருந்து பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவரின் சின்ன வயசு அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டது பெரிய படிப்பினையாக இருந்தது. அவர் என்னுடன் பேசிய அனைத்தையும் வைத்து நிறையக் கற்றுக் கொண்டேன்” என்று சிலாகித்துக் கூறினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours