இது குறித்துப் பேசிய அவர், “நான் இதைச் சொன்னால் எனக்குப் பிரச்னைகள் கூட வரலாம். நான் 22 வருடங்களாக திரைத்துறையில் நடித்து வருகிறேன். இதுவரை 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 2 டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன்.
ஆனால் எனக்குச் சமமான ஊதியம் எங்குமே கிடைத்ததில்லை. ‘சிட்டடெல்’ தொடரில் நடித்தபோது மட்டுமே எனக்கு ஆண் நடிகர்களுக்கு நிகரான ஊதியம் கிடைத்திருக்கிறது. ஆனால், நான் குறைவான சம்பளம் பெற்ற படத்திற்கும் சமமான உழைப்பையும், நேரத்தையும் கொடுத்திருக்கிறேன்.
அமேசான் நிறுவனம் நீங்கள் இணை நடிகையாக நடித்துள்ளீர்கள். அதனால் இந்தச் சம்பளம் உங்களுக்குப் பொருத்தமானதுதான் என்று என்னிடம் கூறியது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆண் நடிகருக்கும், பெண் நடிகருக்கும் இருக்கும் சம்பள வேறுபாடுகள் குறித்து முன்னரே பிரியங்கா சோப்ரா நிறைய முறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours