3/11/2023 3:17:44 PM
திஸ்பார்க்லேண்ட் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, ரவி பார்கவன் இயக்கத்தில் உருவாகும் படம், ‘மூத்தகுடி’. முக்கிய வேடத்தில் கே.ஆர்.விஜயா நடிக்கிறார். கடந்த 1970களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதை 1970, 1990 மற்றும் நிகழ்காலத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ‘சாவி’ படத்துக்குப் பிறகு பிரகாஷ் சந்திரா ஹீரோவாக நடிக்கும் படமான இதில், முக்கிய வேடங்களில் தருண்கோபி, அன்விஷா, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம்புலி, யார் கண்ணன் நடிக்கின்றனர். எம்.சரக்குட்டி கதை, வசனம் எழுதுகிறார். ரவிசாமி ஒளிப்பதிவு செய்ய, ேஜ.ஆர்.முருகானந்தம் இசை அமைக்கிறார். நந்தலாலா பாடல்கள் எழுதுகிறார்.
படம் குறித்து ரவி பார்கவன் கூறுகையில்:
மூன்று காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால், அந்தந்த காலக்கட்டத்தில் பயன்படுத்திய பொருட்களை தேடிப்பிடித்து படத்தில் பயன்படுத்தியுள்ளோம். திரையில் ரசிகர்கள் பார்க்கும்போது, அந்தந்த காலக்கட்டத்தில் வாழும் உணர்வு ஏற்படும். தருண்கோபி வில்லனாக நடிக்கிறார். இப்படம் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது என்றார்.
+ There are no comments
Add yours