“சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்!”- அத்துமீறிய புகைப்படக்காரர்கள் குறித்து ரன்பீர் கபூர் | Ranbir Kapoor confirms taking legal action against the media house, which invaded Alia Bhatt’s privacy

Estimated read time 1 min read

இந்நிலையில் ஆலியா பட்டின் கணவரான நடிகர் ரன்பீர் கபூர் இந்தச் சம்பவம் குறித்து நேர்காணல் ஒன்றில் விமர்சித்துப் பேசியுள்ளார். இது பற்றிப் பேசிய அவர், “இது தனியுரிமை மீதான தாக்குதல் என்று கருதுகிறேன். என் வீட்டிற்குள் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். அது என்னுடைய வீடு. என் வீட்டிற்குள் புகைப்படம் எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதியில்லை. இது முற்றிலும் அராஜகமான செயல். இதுபற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. இந்த விவகாரத்தை நாங்கள் சட்ட ரீதியாக அணுகி, தகுந்த நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்” என்றார்.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்

ரன்பீர் கபூர் – ஆலியா பட்

மேலும், பிரபலங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள் பற்றிப் பேசிய ரன்பீர், “நாங்கள் பிரபலங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர்களை மதிக்கிறோம். அவர்கள் எங்கள் திரையுலக வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு நெருங்கிய உறவு இருக்கிறது. அவர்கள் எங்களுடன் வேலை செய்கிறார்கள், நாங்கள் அவர்களுடன் வேலை செய்கிறோம். யாரோ ஒருவர் தவறாக நடந்து கொள்வது ஒட்டுமொத்த புகைப்படக் கலைஞர்களின் பெயரையும் கெடுத்துவிடுகிறது” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours