ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,
ரசிகர்கள் ‘தலைவா…தலைவா’ என்று சத்தமிட பேச ஆரம்பித்த வெற்றிமாறன், “கொஞ்ச நாளுக்கு முன்னாடி ‘சினிமா நடிகர்களை தலைவர்கள் என்று சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை’ என்று சொன்னேன். இயக்குநர்களுக்கும் அது பொருந்தும். எனவே தலைவா என்று சொல்லாதீர்கள்” என்று கூறினார். இதையடுத்து படத்தில் பணியாற்றிய எல்லா தொழிலாளர்கள், நடிகர்கள், டெக்னீசியன்கள் என எல்லோர் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். மேலும் படத்தில் கடுமையாக உழைத்த அனைவரின் உழைப்பையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். அடுத்து விடுதலை 2, வாடிவாசல், வட சென்னை 2 படம் என ரசிகர்களுக்கு அப்டேட் சொன்னார்.
+ There are no comments
Add yours