Upcoming Tamil Movies Series Releasing On Ott In 2023 Netflix Prime Video Sunnxt Aha Zee5 Sonyliv And Hotstar | விரைவில் OTTயில் வெளியாக இருக்கும் சூப்பர்ஹிட் தமிழ் படங்கள்

Estimated read time 1 min read

வாத்தி

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற படம் தான் ‘வாத்தி’.  சூர்யதேவரா நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்திருந்த இந்த படத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய் குமார், சமுத்திரக்கனி, தணிகெல்லா பரணி, ஆடுகளம் நரேன், தோட்டப்பள்ளி மது, கென் கருணாஸ், சுமந்த், பாரதிராஜா இளவரசு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  1990களில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.  அரசு கல்லூரி தனியார்மயமாவதை தடுக்க ஒரு ஆசிரியர் போராடுவதை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘வாத்தி’ படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை மிக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.  மார்ச் மாத இறுதியில் ‘வாத்தி‘ படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் மாஸாக வரும் ‘தி லெஜண்ட்’ – 7 மாதங்களுக்கு பின்… எந்த ஓடிடியில் தெரியுமா?

டாடா 

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ’டாடா’ திரைப்படம் நல்ல வர வேற்பை பெற்றது.இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்து இருந்தார். மேலும் பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.  மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

ரன் பேபி ரன்

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த ரன் பேபி ரன் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தை இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி இருந்தார்.  சாம் சி எஸ் இசையில் உருவான இப்படத்தில், இஷா தல்வார், ராதிகா சரத்குமார், ஜோ மல்லூரி, ஹரீஷ் பெராடி, ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, KPY பாலா, ஜார்ஜ் மரியன், நாகிநீடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.  ரன் பேபி ரன் திரைப்படம் மார்ச் 10 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

பொம்மை நாயகி

கதையின் நாயகனாக யோகிபாபு நடித்த பொம்மை நாயகி படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.  யோகிபாபுவின் மனைவியாக சுபத்ரா நடித்து இருந்தார். இயக்குநர் ஷான் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.  பொம்மை நாயகி திரைப்படம் வரும் மார்ச் 10-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

 தி லெஜண்ட்

தொழிலதிபர் சரவணன் அருள் நடிப்பில் உருவான ஆக்சன் திரைப்படம் ‘தி லெஜெண்ட்’. ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே சரவணன் அருள் மக்கள் மத்தியில் தொலைக்காட்சி விளம்பரம் மூலம் அறிமுகமாயிருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடலா, கீத்திகா திவாரி, பிரபு, சுமன், நாசர், விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, விஜயகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் Tiger Nageswara Rao!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours