ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதிய சங்கர்தாஸும் ‘திரைக்கதை எழுத என்னிடம் வந்தபோது, எஸ்.ரா பீகார் குடும்பம் என்றுதான் எழுதியிருந்தார். நான்தான் அயோத்தியைச் சேர்ந்த சனாதன குடும்பம் என்று மாற்றினேன்’ என்றார். அதன்படி பார்த்தால், இது என்னுடையக் கதை என்பது உறுதியாகிறது. ஆனால், எஸ்.ரா அறத்தையும் நேர்மையையும் கடைபிடிக்கவில்லை” என்று குற்றம்சாட்டியவர்,
“எனக்குப் படம் பிடித்திருந்தது. வட இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்தி பரவும் இன்றைய சூழலில் தமிழர்கள் எவ்வாறானவர்கள் என்பதை உணர்த்தும் கதையாக உள்ளது. படத்தைப் பாராட்டுகிறேன்; வரவேற்கிறேன். ஆனால், பீகார் குடும்பத்திற்கு உதவிய சாமுவேல் ஜோதிகுமாரையும் சுரேஷ் பாபுவையும் படக்குழு அடையாளப்படுத்தியிருக்கலாம். பல படங்களில் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கும்போது அடையாளப்படுத்துவதுண்டு. எனது கதையைத்தான் திரைப்படமாக்குகிறார்கள் என்று தெரிந்திருந்தால் இதைத்தான் படக்குழுவிடம் வலியுறுத்தியிருப்பேன்.
எனக்கு இதை வைத்து பெயர் வாங்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லை. காப்பி ரைட்டும் வேண்டாம். ஏனென்றால், நானும் உண்மைச் சம்பவத்தைத்தான் கதையாக எழுதினேன். என்னுடைய வருத்தமெல்லாம் உதவி செய்த உண்மையானவர்களை அடையாளப்படுத்தவில்லை என்பதுதான். அப்படி அடையாளப்படுத்தியிருந்தால் சமூகத்திற்கு பெரிய ஊக்கமாக அமைந்திருக்கும். ஆனால், சசிகுமாரை மட்டும் காட்டி கற்பனை கதைபோல் எடுத்துள்ளது பெரிய வருத்தத்தை உண்டாக்குகிறது” என்கிறார் விரக்தியான குரலில்.
+ There are no comments
Add yours