நண்பனின் துரோகத்தை ‛பியூட்டி’ என்ற பெயரில் படமாக்கிய இயக்குனர்
07 மார், 2023 – 13:56 IST
ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘பியூட்டி’. அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா இயக்கி இருக்கிறார். இவர் கே.பாக்யராஜ் நடத்தும் மாத இதழில் ஓவியராக பணியாற்றுகிறார். இப்படத்தில் நாயகனாக ரிஷி நடிக்க, நாயகியாக அறிமுக நடிகை கரீனா ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் காயா கபூர், சிங்கமுத்து, ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இலக்கியன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கோ.ஆனந்த் சிவா கூறியதாவது: பெண்களை மையப்படுத்திய படங்கள் என்றுமே வெற்றி பெறும். எங்கள் இயக்குனர் பாக்யராஜின் படங்களும் அந்த வகையை சார்ந்த படங்கள் தான். அதனால் தான் அவருடைய படங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. முற்றிலும் வித்தியாசமான, எதிர்மறை எண்ணம் கொண்ட ஒருவருடன் நான் நண்பனாக பழக நேர்ந்த பொழுது, அவரின் செயல்பாடுகளும், துரோகங்களும் என்னைப் பெரிதும் பாதித்தன. அவரிடம் நான் பார்த்த பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து நான் எழுதி, இயக்கியிருக்கும் படம் இந்த ‘பியூட்டி’. இந்த படம் முழுமையான கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இருக்கும். என்றார்.
+ There are no comments
Add yours