சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை கிராமத்தைச் ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புள்ளி மான் இறைத்தேடி வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று இறை தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது, அப்போது அங்கிருந்த நாய்கள் மானை கடித்து குதறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் கெங்கவல்லி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மானை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours