Ilayaraja: 'மைக்கை கொடுத்துட்டு போயிடுவேன்..' விடுதலை ஆடியோ லாஞ்சில் கோபப்பட்ட இளையராஜா…! என்னதான் நடந்தது?

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன். இவர் நடிகர் சூரியை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் விடுதலை. 2 பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

கோபப்பட்ட இளையராஜா:

இதன் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா கலந்து கொண்டாடர். ரசிகர்கள் முன்பு இளையராஜா பேசிக்கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்த ஆர்வத்தில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆர்ப்பரித்தனர். இளையராஜா பேச ஆரம்பித்த பிறகும், அவர் பேசிக்கொண்டிருந்தபோதும் ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டே இருந்ததால் இளையராஜா கோபமடைந்தார். மேலும், இந்த மாதிரி சத்தம் போட்டீர்கள் என்றால் நான் மைக்கை கொடுத்துவிட்டு போயிக் கொண்டே இருப்பேன் என்று கூறினார். இதன்பின்னரே ரசிகர்கள் அமைதியானார்கள்.

முன்னதாக, இந்த விழாவில் இளையராஜா பேசும்போது. இந்த படம் தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத களத்தில் அமைந்த படமாக இருக்கும் என குறிப்பிட்டார். அவருடைய ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு திரைக்கதையாக உள்ளது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையுலகத்திற்கு வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குனர் என்பதை சொல்லிக் கொள்வதில் நான் சந்தோசம் அடைகிறேன்.

நான் 1500 படங்கள் பண்ணிய பிறகு இதை சொல்வதென்றால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அதுபோல் இந்த படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என்றார். பின்னர், விழா மேடையில் வழி நெடுக காட்டு மல்லி பாடலை பாடி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours