காமெடி போலீஸ் காஜல் – Dinakaran Cinema News

Estimated read time 1 min read

காமெடி போலீஸ் காஜல்

3/7/2023 2:38:58 PM

காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘கோஸ்டி’ வருகிற மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குலேபகாவலி, ‘ஜாக்பாட்’ படங்களை இயக்கிய கல்யாண் இயக்கி உள்ளார். யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் கல்யாண் கூறியதாவது: இது காமெடி பேய் படம். ஆனாலும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமானது. இதில் காஜல் அகர்வால் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

அதில் ஒன்று காமெடி போலீஸ். அவர் சீரியசாகத்தான் நடிப்பார் ஆனால் அதை பார்க்கும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்தார். கைக் குழந்தையுடன் படப்பிடிப்புக்கு வந்தாலும் அதனை அவர் அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு நடித்துக் கொடுத்தார். படத்தில் 36 காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். காஜல் ஏற்கெனவே பல காமெடி படங்களில் நடித்திருப்பதால் எளிதாக நடித்து கொடுத்தார். என்றார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours