அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரன்பீர், தென்னிந்தியத் திரைப்படங்களின் தொடர் வெற்றி குறித்தும் பாலிவுட் சினிமா மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.
இதுபற்றி பேசிய அவர், “கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர். பாகுபலி திரைப்படங்களின் வெற்றியைக் குறித்து பாலிவுட் பெருமைப்படுகிறது. இப்படங்களால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். இதேபோன்று மிகப்பெரிய வரவேற்பு கொண்ட திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், ஊடகங்கள்தான் பாலிவுட்டைக் குற்றமாகச் சொல்கின்றன. சில பத்திரிகையாளர்கள் ‘பாலிவுட்டைப் புறக்கணிக்க வேண்டும் (boycott Bollywood), போதைப்பொருள் புழக்கம் இங்கே இருக்கிறது, பாலிவுட் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என எங்களை இழிவுபடுத்த நினைக்கிறார்கள்.
ஏன் இதுபோன்ற பொய்களையும், வதந்திகளையும் பரப்புகிறீர்கள்? எங்கள் வேலை உங்களை மகிழ்விப்பது மட்டுமே. இந்தப் பிரச்னை நடிகர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இந்த சினிமா துறையில் பலர் பணிபுரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்காதீர்கள். இதை நான் அறிவற்ற முட்டாள்தனமான செயலாகப் பார்க்கிறேன். இப்போது நான் என் படத்திற்காக புரோமோஷன் செய்து வருவதால், பத்திரிகையாளர் சந்திப்புகளில் இந்தக் கேள்வியை என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள். ஊடகங்களில் எதையாவது படித்துவிட்டு என்னிடம் கேட்கிறார்கள், நான் என் கருத்தைச் சொன்னால் அது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இது முற்றிலும் முட்டாள்தனமான செயல்!” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours