3/6/2023 1:09:57 AM
சென்னை: ‘செம்பருத்தி பூ’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானவர், பார்வதி அருண். பிறகு பல படங்களில் நடித்த அவர், கடந்த ஆண்டு ‘காரி’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். தற்போது அவர் நடித்துள்ள படம், ‘மெமரீஸ்’. இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் மலையாளத்தில் அறிமுகமாகி, 5 ஆண்டு களுக்குப் பிறகுதான் தமிழில் நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. தமிழில் நான் நடிக்கும் 2வது படம், ‘மெமரீஸ்’. இதில் ஜானகி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இது கொரோனா காலத்துக்கு முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட படம். ஒரு இளைஞனுக்கு தனது ஞாபகங்கள் அனைத்தும் மறந்து விடுகிறது. அவன் யார் என்று அவனுக்கே தெரியவில்லை. இதனால் சில கொலைப்பழிகள் அவன் மீது விழுகிறது. இது போன்ற சிக்கலில் இருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பது கதை. அவனுக்கு சிக்கலை உண்டாக்கும் பெண்ணாகவும், மற்றொரு பெண்ணாகவும் இருவராக நடித்துள்ளேன். இப்படம் எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வெற்றி, ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி நடித்துள்ளனர். சிஜு தமீன்ஸ் தயாரிக்கிறார். ஷியாம், பிரவீன் இயக்கியுள்ளனர். அர்மோ, கிரண் ஒளிப்
பதிவு செய்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் இசை அமைத்துள்ளார். வரும் 10ம் தேதி படம் ரிலீசாகிறது.
+ There are no comments
Add yours