3/6/2023 4:46:30 PM
கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவர், யஷ். திரைக்கு வந்த ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறினார். கடந்த 6 வருடங்களாக ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களைத் தவிர வேறெந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படத்தின் 3ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே யஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போது நான் நிறைய கதைகள் கேட்டு வருகிறேன்.
அடுத்து எந்தப் படத்தில் நடித்தாலும், அதை ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களுடன் ரசிகர்களும், பொதுமக்களும், விமர்சகர்களும் ஒப்பிடுவார்கள் என்று தெரியும். அதனால்தான் அடுத்த படத்தைப் பற்றிய விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறேன். ரசிகர்கள் எனக்கான நேரத்தைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். வரும் ஏப்ரல் மாதம் என்னிடம் இருந்து ஒரு புதிய தகவல் வெளியாகும்’ என்றார். இந்த அறிவிப்பு யஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours