பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு கோலார் தங்கவயல் பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தச் சமயத்தில் இரஞ்சித்திடமிருந்து அந்தப் படத்தின் அப்டேட் வெளிவரும் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ‘சார்பட்டா 2’ அறிவிப்பு வந்திருக்கிறது.
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரித்து வருகிறது. தினேஷ், கலையரசன் நடிப்பில் ‘தண்டகாரண்யம்’, தினேஷ், மாறன் நடிப்பில் ‘ஜே.பேபி’, குருசோமசுந்தரம் நடிப்பில் ‘பாட்டில் ராதா’, அசோக்செல்வன், சாந்தனு நடிப்பில் ‘ப்ளூ ஸ்டார்’, இவை தவிர ‘தங்கலான்’ படத்தையும் ஞானவேல்ராஜாவுடன் இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில்தான் ‘சார்பட்டா 2’ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி நடித்து வரும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு இம்மாத இறுதியுடன் நிறைவுபெறுகிறது. இதன் பின் பா.இரஞ்சித், கமல்ஹாசன் பட வேலைகளில் இறங்குவார் என எதிர்பார்த்து வந்தனர். ஆனால், கமல் அடுத்து ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் நடிக்க உள்ளதால், இந்த இடைவெளியில் மற்றொரு படத்தை இயக்கிவிட நினைத்திருக்கிறார் பா.இரஞ்சித்.
+ There are no comments
Add yours