‘வேளாங்கண்ணி மாதா கோயில், முன்பு இந்துக் கோயிலாக இருந்தது; தற்போதும் அங்கு மதமாற்றம் தீவிரமாக நடக்கிறது’ எனத் தொடங்கும் படத்தில் ‘சங்கி’, ‘நீட்’, ‘காடுவெட்டி’, ‘கௌரவக்கொலை’, ‘திராவிட மாடல்’ ‘விடுதலை’ ‘சிறுத்தை’ ‘சாத்தான்குளம்’ என எக்கச்சக்கமான குறியீடுகள் காட்டப்படுகின்றன.’இந்து அறநிலையத்துறை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்’ என்கிற படம், நீதிக்கட்சி அதற்குப் பிந்தைய திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளை நேரடியாக விமர்சிக்கிறது.
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிர்லா போஸ் படம் தொடர்பாக சில விஷயங்களை நம்மிடம் கொள்ள விரும்புவதாகச் சொல்லவே, அவரைச் சந்தித்தோம்.”படத்துல நீங்கதான் ஹீரோன்னுதான் என்கிட்ட முதல்ல சொன்னாங்க. ஆனா கதையை முழுசா எங்கிட்ட சொல்லல. ஒரு கிரைம் நடக்கும், அதை நீங்க இன்வஸ்டிகேட் பண்ணுவீங்கன்னு மட்டும் சொன்னாங்க. கேரக்டர் ரோல் பண்றவங்களுக்கு சினிமாவுல இந்த மாதிரியெல்லாம் நடக்கும்கிறதை என்னுடைய 20 வருஷ சினிமா அனுபவத்துல பார்த்திருக்கறதால, பெரிசா எடுத்துக்கல. அவங்களும் புதுசா படம் எடுக்க வந்தவங்கதான். அதனால சரின்னு கிளம்பி வேளாங்கண்ணிக்கு ஷூட் போனேன். அங்க போனா எதுவுமே ப்ளான் பண்ணி நடக்கல. படத்தின் டயலாக்னு ஏதேதோ பேசிட்டிருந்தாங்க. அந்தச் சூழல் ஒரு மாதிரியா இருந்தது.
ரொம்ப நாளா டிவியில நடிச்சிட்டிருக்கேன். நடிப்புனு வந்துட்டா, ‘இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேனு சொல்ல மாட்டேன் நான். அதேநேரம் ஒரு சித்தாந்தம் பத்தி உயர்வா பேசிட்டுப் போகலாம். ஆனா இன்னொரு சித்தாந்தம் பத்தி எதிர்மறையா பேசறதுல எனக்கு உடன்பாடில்லை. அப்படி யாரையும், எதையும் குறிப்பிட்டுத் தாக்கி எடுக்கப்படுகிற சினிமா வெகுஜனங்களுக்கான சினிமாவா இருக்காது.அதனால படக்குழுவுடன் எனக்கு செட் ஆகாமலேயே இருந்தது. ஆனாலும் அவங்க கேட்ட தேதியில நடிச்சுக் கொடுத்தேன். டயலாக்னு அரைகுறையா எதையோ தந்தாங்க.
+ There are no comments
Add yours