‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
#TigerNageswaraRao pic.twitter.com/jWUKmM5iEq
— Ravi Teja (@RaviTeja_offl) November 3, 2021
மேலும் படிக்க | Ileana D Cruz: நடிகை இலியானா நடிக்க தடை… என்ன காரணம் தெரியுமா?
ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதும் இந்த திரைப்படத்திற்கு அவினாஷ் கொல்லா நிர்வாக தயாரிப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். இந்த ஆண்டில் வெளியான பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக 5 ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிராமத்தில் படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். இதில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பங்கேற்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகிறது.
டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃப்ரீ லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. 1970களில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த பிரபல திருடனின் சுயசரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கெட்டப் ஆகியவை வித்தியாசமாக இருக்கும். நடிகர் இதுவரை இதற்கு முன் ஏற்றிராத கதாபாத்திரமாக இருப்பதால், இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | மீண்டும் தொடங்கும் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பு! ஹீரோ இவர் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours