“என் அப்பாவால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டேன்” – நடிகை குஷ்பூ | Kushboo, revealed that she was sexually abused by her father

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் 90-களில் சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. 2010-ம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகளில் செயல்பட்டு வரும் இவர் பா.ஜ.கவில் இணைந்தார். அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இவர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 8 வயதிலேயே தான் தனது அப்பாவால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக, அதிர்ச்சித் தகவலை அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

`வீ தி வுமன்’ என்ற நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் பர்கா தத் உடனான உரையாடலின்போது இது பற்றி பேசிய நடிகை குஷ்பூ, “சிறுவனோ, சிறுமியோ… ஒரு குழந்தை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் அந்த தாக்கம் குழந்தையை வாழ்க்கை முழுவதும் பயமுறுத்திக் கொண்டே இருக்கும். என் அம்மாவுக்கு மிகவும் மோசமான திருமண வாழ்க்கையே அமைந்தது. தன் மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்ப தலைவர்தான் அவருக்கு அமைந்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours