இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “எனது நண்பரும் பயிற்சியாளருமான கிறிஸ் கெதின் நாளை அமெரிக்காவிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்புகிறார். எங்களின் இரண்டாவது கட்ட பயிற்சி இன்னும் 10 வாரங்களில் நிறைவடையவுள்ளது. ஏற்கெனவே 6 மாதங்கள் தீவிரமாகப் பயிற்சி செய்துவிட்டோம். இதைச் செய்யாமல் இருந்தால் என்னால் திருப்தியாகவும், சுறுசுறுப்பாகவும், உந்துதலாகவும், நிம்மதியாகவும் இருந்திருக்க முடியாது.
இந்தப் பயிற்சியைக் கொஞ்சம் உடலுக்காகவும், அதிகமாக மனதுக்காகவும் செய்தேன். இந்தக் கடுமையான உழைப்புக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கும் கிறிஸ்ஸுக்குப் போதுமான நன்றியை என்னால் சொல்ல முடியவில்லை. பணியின் மீதான உங்கள் நேர்மை, அறிவு மற்றும் உங்கள் ஞானத்தை ஜிம்மிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உங்களைப் போன்ற மனிதர்கள் உலகிற்குத் தேவை.
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்களுடன் இணைந்து பணியாற்றியது, பயிற்சி எடுத்ததை விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமலோ செய்திருக்கலாம். ஆனால், எப்படிச் செய்திருந்தாலும் உங்களிடம் இருக்கும் ஆற்றல் என்னுள் ஒரு சிறுபொறியை நிச்சயம் உண்டாக்கிக் கொண்டே இருக்கும். நன்றாக இருங்கள் நண்பரே. விரைவில் நான் உன்னை விரைவில் சந்திப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதனுடன் பயிற்சி எடுக்கும் காணொலி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours