3/3/2023 2:57:39 PM
‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘மை டியர் மிஷ்கின், உங்களுடன் இவ்வளவு நெருங்கிய நிலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றி சொன்னாலும் போதாது. நான் உங்களுக்கு ஒருபோதும் போதுமான அளவுக்கு நன்றி சொல்ல முடியாது என்றாலும், ஒரு மில்லியன் நன்றிகள்’ என்று புகழ்ந்துள்ளார்.
+ There are no comments
Add yours