தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று பிரபலமாக அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கடி படம் பற்றிய அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் . இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் அடுத்த படம் குறித்த மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கப்போகும் ‘தலைவர் 170’ படத்தில் வலுவான கூட்டணி இணைந்துள்ளது, இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த த.செ.ஞானவேல் தான் ‘தலைவர் 170’ படத்தை இயக்குகிறார்.
மேலும் படிக்க | மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள அரியவன் படத்தின் திரைவிமர்சனம்!
e are feeling honoured to announce our next association
Directed by critically acclaimed
— Lyca Productions (@LycaProductions) March 2, 2023
‘ஜெய் பீம்’ படம் போன்று ‘தலைவர் 170’ படமும் ஏதேனும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தலைவர் 170’ படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைகா குழும தலைவர் திரு.சுபாஸ்கரன் அவர்கள் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் ‘#தலைவர் 170’ திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து, மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.
இயக்குனர் திரு.த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு.அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் திரு.சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா ப்ரொடக்ஷன்ஸ் தலைமை பொறுப்பாளர் திரு.கே.ஜி.எம்.தமிழ் குமரன் அவர்களின் தலைமையில் ‘தலைவர் 170 திரைப்படம்’ 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழா தான், அவருடன் மீண்டும் இணைவதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துக்களோடு 2024 மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராகும், நன்றி! என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | சூர்யா 42 vs லியோ; மாஸ் காட்டும் சூர்யா; விஜய் சறுக்கல் ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours