ஆலியா சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குழந்தைகள் ஆலியாவிடம்தான் இருப்பதாகவும், அவர்கள் தங்களின் படிப்பை இந்தியாவில் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகளின் படிப்பு குறித்து அடுத்த வாரம் கோர்ட்டில் தகவல் கொடுக்கும்படி ஆலியாவிற்கு கோர்ட் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 3ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
இது குறித்து அவர் கூறுகையில், “நவாசுதீன் தாயாரின் இக்குற்றச்சாட்டு என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. எனது இரண்டு வயது மகனுக்கு அப்பா என்றால் என்னவென்று கூட இன்னும் தெரியாது. அவர் துபாய் வந்தபோது கூட எனது மகனுக்கு நேரம் ஒதுக்கியது கிடையாது” என்று தெரிவித்தார். ஆலியா, இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டியில், நவாசுதீன் தனது மகனை வெறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆலியா சித்திக்கின் இயற்பெயர் அஞ்சனா கிஷோர் பாண்டே. இவரும் நவாசுதீனும் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். 2010-ம் ஆண்டு பிரிந்த இவர்கள், அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இவர்கள் மீண்டும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டே ஆலியா தன் கணவரை விவாகரத்து செய்ய முயன்றுவருவதாகத் தெரிவித்திருந்தார். அப்போதிருந்தே இரண்டாவது மகனின் பிறப்பு குறித்த வழக்கு, மும்பை பங்களாவுக்கான உரிமை குறித்த வழக்கு, குழந்தைகள் யாரிடம் வளரவேண்டும் என்பது தொடர்பான வழக்கு உள்ளிட்ட சட்டப்போராட்டங்களை இருவரும் நடத்திவருகின்றனர்.
+ There are no comments
Add yours