கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெற்ற திரைப்பட விழா நிகழ்ச்சி ஒன்றில் ரன்பீர் கபூரிடம், `பாகிஸ்தானைச் சேர்ந்த இயக்குநர்கள், பாகிஸ்தான் திரைத்துறையினரிடம் சேர்ந்து பணியாற்றுவீர்களா?’ என்று கேட்டார். அதற்கு ரன்பீர், “நிச்சயமாகப் பணியாற்றுவேன். கலைஞனுக்கு எல்லை ஏதும் இல்லை, குறிப்பாக கலைக்கு எல்லைகள் இல்லை” என்று கூறியிருந்தார்.பாலிவுட் திரை வட்டாரத்திலும், அரசியல் தளங்களிலும் சிலர் இந்த பதில் குறித்து சலசலப்பை எற்படுத்தினர்.
இந்நிலையில் ரன்பீர் கபூர் நடித்த ‘Tu Jhoothi Main Makkaar’ படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரன்பீர், இதுகுறித்துப் பேசினார், “நான் பேசியது தவாறாக சென்றுவிட்டது. நான் கலந்துகொண்ட திரைப்பட விழாவில் பல பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்கள், இயக்குநர்கள் பங்குபெற்றிருந்தனர். அவர்கள் என்னிடம் பாகிஸ்தான் திரைதுறையினரிடம் சேர்ந்து பணியாற்றுவீர்களா என்று கேட்டனர். அதற்கு நான் ‘நல்ல கதையிருந்தால் சொல்லுங்கள் நடிக்கத் தயார்’ என்று கூறினேன். சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் நான் எதுவும் பேசவில்லை” என்று விளக்கமளித்தார்.
+ There are no comments
Add yours