மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் விஜய் கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா பல ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார். காஷ்மீரில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கைதி, விக்ரம் திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படத்தில் லியோ படமும் இணையுள்ளதாக கூறப்படுவதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. லியோ படத்தின் உரிமை 400 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்ற தகவல் வெளியானது.

லியோவை முறியடித்த சூர்யா 42 :

அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வரலாற்று திரைப்படம் தற்காலிகமான சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவின் ஜோடிகளாக பாலிவுட் நடிகைகள் மிருணாள் தாகூர் மற்றும் திஷா பதானி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்கள். இப்படம் குறித்த அப்டேட் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை என்றாலும் சைலண்டாக படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்ற தகவல் மட்டும் வெளியானதை அடுத்து தற்போது சூர்யா 42 திரைப்படத்தின் உரிமை 500 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யா ரசிகர்கள் விஜயின் லியோ படத்தை முந்தியதை கொண்டாடி வருகிறார்கள்.

ரிலீசுக்கு முன்பே கோடியில் வியாபாரம்:

இந்த இரு படங்களின் உரிமையும் இத்தனை கோடிக்கு விற்பனையாகி உள்ளது அதுவும் படம் வெளியாவதற்கு முன்னரே என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டுமின்றி சமீபகாலமாக வெளியாகும் பல திரைப்படங்களும் வியாபார ரீதியில் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் சினிமா என்டர்டெயின்மென்ட் என்பதையும் தாண்டி ஒரு மிக பெரிய பிசினஸாக மாறி வருகிறது என்பதை பார்க்க முடிகிறது. முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கின்றன.

பெரும்பாலானவை மிகவும் சுமாரான படங்களாகவே இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி சினிமா வெறும் பணம் குவிக்கும் பிசினஸாக மாறியுள்ளது. அதனால் சினிமா ஒரு என்டர்டெயின்மென்ட் ஃபேக்டர் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போகிறது. இதனால் சினிமா சரியான பாதையில் தான் பயணித்து வருகிறதா என ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

+ There are no comments
Add yours