Sparsh, Paar, Iqbal போன்ற படங்கள் மூலம் 80’ஸ் காலங்களில் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகரான வளம் வந்தவர் நசீருதின் ஷா. இவர் நடித்த ‘Taj – Divided by Blood’ திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நசீருதின் ஷா, தென்னிந்திய திரைப்படத் துறை குறித்தும் ஓடிடி-யின் வளார்ச்சியால் இன்னும் பத்து ஆண்டுகளில் தியேட்டர் இருக்காது என்றும் பேசியுள்ளார்.
இது பற்றி பேசிய அவர், “தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் கமர்ஷியல் திரைப்படங்கள்கூட மிகவும் கற்பனை திறம் மிக்கதாக இருக்கிறது. எதார்த்தமாக இருக்கிறது. ரசிப்புத் தன்மையை மாற்றி மேம்படுத்தும் அதேசமயம் தோல்வியில்லாமல் படத்தை வெளியிடுகிறார்கள் அவர்கள். நான் இதை மிக நீண்ட காலமாக கவனித்துக் கண்டுபிடித்தேன். அவர்கள் பாடல்களைகூட சிறப்பாகப் படமாக்குகிறார்கள்.
உண்மையில் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் கடினமாக உழைக்கின்றனர். அவர்களின் படங்கள் இந்தி சினிமாவை விடவும் சிறப்பாகச் செயல்படுகின்றன” என்று கூறினார். மேலும் ஓடிடி-யின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், “நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் OTT தான் எதிர்காலம். உலகெங்கிலும் உள்ள திரைப்பட அரங்குகள் மறைந்துவிடும் என்று நான் சிறிது காலமாகக் கணித்து வருகிறேன். இன்னும் 10 வருடங்களில் சினிமா தியேட்டர் என்ற ஒன்று இருக்காது என்று நினைக்கிறேன். திரைப்படங்கள் தனிமையில் பார்க்கும் அனுபவமாகக் கூட மாறலாம், அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை” என்றார்.
+ There are no comments
Add yours