3/1/2023 3:02:43 PM
‘மன்மத லீலை’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள படம், ‘கஸ்டடி’. இது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. ‘மாமனிதன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.
முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில் இளையராஜாவை நேரில் சந்தித்துப் பேசிய நாகசைதன்யா, ‘மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டது. அவரது இசை என் வாழ்க்கைப் பயணத்தில் முழுமையாக நிறைந்துள்ளது. மிக அதிகமான முறை அவரது இசையை மனதில் ஏந்திக்கொண்டு நடித்துள்ளேன். ‘கஸ்டடி’ படத்துக்கு அவர் இசை அமைத்துள்ளார்.
உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்று நெகிழ்ந்துள்ளார். வரும் மே 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் நடித்துள்ளனர்.
+ There are no comments
Add yours