மனோஜ் மஞ்சு இரண்டாவது திருமணம்: அரசியல் வாரிசை மணக்கிறார்
01 மார், 2023 – 15:25 IST
![Manoj-Manju-to-marry-politician-daughter](https://img1g.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20230301152547699712.jpg)
பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு. குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ‘தொங்கா தொங்காடி’ படத்தின் மூலம் ஹீரோவாகி அதன்பிறகு 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது ‘அகம் பிரம்மாஸ்மி’, ‘வாட் த பிஸ்’ படங்களில் நடித்து வருகிறார்.
மனோஜ் மஞ்சுவுக்கும் பிரணதி ரெட்டி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த நிலையில் மனோஜ் மஞ்சுவும் ஆந்திர அரசியல்வாதி பூமா நாகிரெட்டியின் மகளான பூமா மவுனிகாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு குடும்பத்தாரும் பச்சைகொடி காட்டிவிட்டதால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். மனோஜ் மஞ்சுவுக்கு மட்டுமல்ல பூமா மவுனிகாவுக்கும் இது 2வது திருமணம் ஆகும்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
![Tamil New Film Mayan](http://stat.dinamalar.com/images/dmr_default.gif)
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
![Tamil New Film Devadas](http://stat.dinamalar.com/images/dmr_default.gif)
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
![Tamil New Film Tamilarasan](http://stat.dinamalar.com/images/dmr_default.gif)
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
![Tamil New Film Yang Mang Chang](http://stat.dinamalar.com/images/dmr_default.gif)
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours