‘இந்தியன் 2’ படத்துக்காக காஜலுக்கு 3.5 மணி நேரம் மேக்கப் | kajal aggarwal had 3.5 hours of make-up for the film Indian 2 Movie

Estimated read time 1 min read

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘இந்தியன்’. 1996-ல் வெளியான இந்தப் படத்தின் அடுத்த பாகம், ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி வருகிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா தயாரிக்கிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. கமல்ஹாசன் சேனாபதி என்ற சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 90 வயதுடையவராக நடிக்கும் அவருக்குச் சிறப்பு மேக்கப் போடப்படுகிறது. காஜல் அகர்வால் அவர் மனைவியாக நடிக்கிறார். அவருக்கும் சிறப்பு மேக்கப் போடுகின்றனர். அதற்காக மட்டும் மூன்றரை மணி நேரம் ஆவதாக படக்குழுத் தெரிவித்துள்ளது. இந்த மேக்கப்பில் காஜல் அகர்வாலை கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours