எனது ஆரம்ப காலங்களில் வரலாற்றைப் பற்றி எனக்கு ஒரு புரிதல் இருந்தது. அப்போது அக்பரின் வரலாறு பற்றிப் படிக்கையில் அக்பர் ஒரு புதிய மதத்தைத் தொடங்க ஆசைப்படுகிறார் என்று எனக்கு சில ஆசிரியர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது முற்றிலும் தவறானது. இதையே நாம் தொடர்ந்து வரலாற்று புத்தகங்களில் படிக்கிறோம், இது முற்றிலும் முட்டாள்தனமானது.
இதைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ வரலாற்றாசிரியர்களை அனுகினேன். அவர்கள் அக்பர் ஒரு புதிய மதத்தைத் தொடங்க முயற்சிக்கவில்லை என்றார்கள். அக்பர் தனிமதம் என ‘டின்-இ இலாஹி (Din-e Elahi)’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை. அவர் அதை ‘வஹ்தத்-இ இலாஹி(Wahdat-e Elahi)’ என்றுதான் அழைத்தார். இறைவன் ஒருவன் என்பதே அதன் அர்த்தம்.
நீங்கள் யாரை வணங்கினாலும், எந்த வடிவத்தில் அவரை வணங்கினாலும் அது பிரச்னையில்லை. நீங்கள் வணங்குவது ஒன்றே ஒன்றுதான், இறைவன் ஒருவன்தான். அதுவே அவருடைய நம்பிக்கையாக இருந்தது. எனவே அவர் தன் பெயரிலும், தனக்கெனவும் ஒரு புதிய மதத்தை உருவாக்க முயற்சிக்கவில்லை. இது நான் அறிந்த உண்மை” என்று கூறினார்.
+ There are no comments
Add yours