Accident : தலைக்கவசம் இருந்தும் அணியாத அதிவேக பயணம்..! வாலிபர் பலி

Estimated read time 0 min read

சேலம்:

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி டூ கொண்டலாம்பட்டி திவ்யா தியேட்டர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் இளம் வாலிபர் பலி.
சங்கராபுரம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (28), இவர் திருப்பூர் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் இரவு பயணம் மேற்கொண்டுள்ளார். அதிவேகம் கவனக்குறைவாக சீலநாயக்கன்பட்டியில் இருந்து கொண்டலாம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற கனரகவாகனத்திலோ அல்லது அதன் பக்கவாட்டிலோ மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
மது போதையில் வாகனம் ஓட்டவில்லை எனவும் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து இவர் மோதி பலியான கனரக வாகனத்தை தற்பொழுது காவல் துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த உடனே விரைந்த ஏ.சி ஆனந்தி தலைமையில் கோபால், பழனிசாமி, குழந்தைவேலு விரைந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தலைக்கவசம் வைத்திருந்தும் அணியவில்லை என்பதும், அதிவேகப் பயணமும் தான் உயிருக்கு காரணம் என்பது வெளிப்படையாக தெரிய வருகிறது. அனைவரும் தலைகாசம் அணிய வேண்டும் என்பதே இச்செய்தியின் நோக்கம்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours