இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரன்பீர், தந்தைக்கும் மகளுக்குமான அன்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தந்தையாகும்போதுதான் அதை உணர முடியும்” என்று தனது குழந்தை ரஹா (Raha) பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அவர், “இன்று காலை விமானத்திற்குச் செல்வதற்கு முன் ஒரு 20 நிமிடம் என் குழந்தையின் முகத்தைப் பார்த்துகொண்டே இருந்தேன். அது எனக்கு புதுவித புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதனால், எங்கு சென்றாலும் நான் என் குழந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அடிக்கடி என் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்துக் கொள்வேன். நீங்கள் தந்தையாக இருக்கும்போது அதை உணர்வீர்கள். அது உலகின் சிறந்த உணர்வு. அது அன்பைப் பற்றிய புதிய புரிதல்களை உண்டாக்கும். குழந்தைக்கு மொழி இல்லை, அன்பிற்கும் மொழியில்லை. அந்த அன்பை உங்களால் விவரிக்க முடியாது” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours