‘அனைவரும் சமம்’: திவ்யா கிருஷ்ணன் வெளியிட்ட குறள் வீடியோ!
28 பிப், 2023 – 10:39 IST

நமது சமுதாய கட்டமைப்பில் மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பது துப்புரவு தொழிலாளர்களின் சமூகம் தான். அவர்களின் அருமை கொரோனா காலக்கட்டத்தில் தான் அனைத்து மக்களுக்கும் புரிந்தது. அதுமுதலே பிரபலங்களில் சிலர், துப்புர தொழிலாளர்களின் வாழ்வியலையும், கஷ்டங்களையும், தியாகங்களையும் ஏதோ ஒருவகையில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி பிரபலமான திவ்யா கிருஷ்ணன் துப்புரவு தொழில் செய்யும் பெண்ணை தனதருகில் அழைத்து அவரை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செயலை செய்து வரும் அவர், இந்நிகழ்வுக்கு தகுந்தாற் போல் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் செய்கின்ற தொழிலால் வேற்றுமை பார்க்கக்கூடாது மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். திவ்யா கிருஷ்ணனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
+ There are no comments
Add yours