ஹாலிவுட்டில் மிகவும் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் வெப்-சீரிஸ் என்றால், அது ருஸ்ஸோ பிரதர்ஸ் உருவாக்கத்தில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும், ‘Citadel’ சீரிஸ்தான். அமேசான் பிரைம் ஒரிஜனல் சீரிஸான இதன் முதல் சீசனின் ஆறு எபிசோட்கள் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. இதில், நடிகை பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் இந்த ஆங்கில வெப்-சீரிஸில் நடித்துள்ளனர்.
‘Citadel’ சீரிஸின் இந்தி வெர்ஷனும் தற்போது பாலிவுட்டில் தயாராகி வருகிறது. இதையும், அமேசான் பிரைம் தயாரிக்கும் நிலையில், ‘The Family Man’,’Farzi’ சீரிஸ் மூலம் பிரபலமான ராஜ் & டிகே ஆகியோரின் உருவாக்கத்தில் தயாராகி வருகிறது. இந்திய வெர்ஷன் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகாத நிலையில், அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமந்தாவுக்கு காயம்
இதில், நடிகை சமந்தா, நடிகர் வருண் தவாண் ஆகியோர், பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் நடித்த கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தெரிகிறது. அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சமந்தா, தற்போது இதன் படப்பிடிப்பில்தான் உள்ளார் என கூறப்படுகிறது. ஆக்சன், ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த தொடரில் தனது கட்டுமஸ்தான உடலுடன் சமந்தா பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது அவரது இன்ஸ்டா ஸ்டோரியில், சிறிது காயமேற்பட்ட அவரது கைகளை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தின் மீது,”ஆக்சனால் கிடைக்கும் சலுகைகள்” என கூலாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், Citadel சீரிஸின், ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பின்போது, நடிகை சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து, அவரது மனதிடத்தையும், உறுதியையைும் பாராட்டி வருகின்றனர்.
மீண்டும் அதே குழு
இதுகுறித்து, சமந்தா கூறுகையில்,”பிரைம் வீடியோ மற்றும் ராஜ் & டிகே இந்த Citadel சீரிஸ் நடிப்பதற்கு என்னை அணுகியபோது, முழு மனதாக அதில் நடிக்க முடிவு செய்தேன். ‘The Family Man‘-இல் இந்தக் குழுவுடன் பணிபுரிந்த பிறகு, மீண்டும் தாய் வீட்டுக்குச் செல்வது போன்றதுதான்.
Citadel சீரிஸின் இந்திய வெர்ஷன் கதை என்னை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியது. ருஸ்ஸோ பிரதர்ஸின் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்த புத்திசாலித்தனமான Citadel பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் முதல்முறையாக வருண் தவாணுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” என்ரார்.
மேலும் படிக்க | LEO Movie: 24 வயது பெண்ணிற்கு அப்பாவாக நடிக்கும் விஜய்?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours